How to make CRAB FRY நண்டு வறுவல் 🦀 | NANDU VARUVAL | Crab Fry Recipe - Mani Eric Blog

How to make CRAB FRY நண்டு வறுவல் 🦀 | NANDU VARUVAL | Crab Fry Recipe

 

ஸ்பைசியான நண்டு வறுவல் செய்வது எப்படி
நண்டு - அரை கிலோ
இஞ்சி, பூண்டு விழுது - 1 ஸ்பூன்
வெங்காயம் - 100 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
தக்காளி - 100 கிராம்
தனியா தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன் உப்பு - தேவைக்கு
நல்லெண்ணெய் - 3 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 மிளகு தூள் - 2 டீஸ்பூன்
* வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
* நண்டை நன்றாக சுத்தம் செய்து நீரை வடித்து வைக்கவும்.
* ஒரு அடி அகலமானக் கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கி பட்டை கிராம்பு போட்டு தாளித்த பின் வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும்.
* வெங்காயம் பாதி வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுதை போட்டு பச்சை வாசனை போக வதக்கிய பின் தக்காளியை சேர்த்து வதக்கவும்.
* அடுத்து அதில் நண்டு சேர்த்துக் மசாலா நண்டு முழுவதும் படுமாறு நன்றாகக் கிளறிவிடவும்.
* தக்காளி நன்றாக வதங்கியதும் அதில் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், தனியா தூள், உப்பு சேர்த்து வதக்கவும். காரம் விரும்புவோர் பச்சை மிளகாய் கொஞ்சம் கூடுதலாக சேர்த்துக்கொள்ளலாம்.
* இது எல்லா வகையான சாதத்திற்கும் நன்றாகப் பொருந்தும்.
* பிறகு அதில் அரை டம்ளர் அளவிற்குத் தண்ணீர் ஊற்றி மூடி வேக வைக்கவும். இடையிடையே பிரட்டி விடவும். தண்ணீர் முழுவதும் வற்றி, நண்டு வெந்து வாசனை வந்த பிறகு மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும். நண்டு விரைவில் வெந்து விடும். * நண்டு வறுவல் ரெடி.


குறிப்பு
* நண்டு கிரேவியாக வேண்டுமானால் மேலும் 1/2 டம்ளர் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம். நண்டு வறுவலை வெங்காயம், தக்காளி, பூண்டு இவை சேர்க்காமலும் சுவையாகச் செய்யலாம். அதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காயவைத்து நண்டு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து 1/2 டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் வற்றும் வரை அடிக்கடி கிளறிவிட்டு வேக வைக்க வேண்டும்.

How to make CRAB FRY நண்டு வறுவல் 🦀 | NANDU VARUVAL | Crab Fry Recipe How to make CRAB FRY நண்டு வறுவல் 🦀  | NANDU VARUVAL | Crab Fry Recipe Reviewed by Mani Eric Blog on September 14, 2020 Rating: 5

No comments:

Featured Post

Admiration of Shri Brihadeeswara Temple, Thanjavur !!!! (TAMIL)

கட்டடக் கலையில் தமிழருடைய சாதனையாக ஒரு கோயிலை கட்டியிருக்கிறான் சோழப்பேரரசின் மாமன்னன்   ராஜராஜ சோழன் . ஆயிரம் வயது ஆகியும...

Facebook

Seo Services
Theme images by Roofoo. Powered by Blogger.