Significance of Akshaya Tritiya !!!! (TAMIL)
Akshaya Tritiya
அக்ஷய திரிதியையில் தங்கம் வாங்கினால் அது பெருகும்
என சமீப காலமாக மீடியாக்கள், தங்க வியாபாரிகள்,சில போலி ஜோஷியர் மற்றும் ஆன்மீகவாதிகளால்
பரப்பப்பட்டு வந்துள்ளது.இது வெறும் பணம் சேர்க்கும் முயற்சி மட்டுமல்ல அந்நாளில் மக்களை
வேறு எந்த புண்ணிய காரியங்களிலும் ஈடு படாமல் தங்க நகை கடைகளின் பின்னே அலைய வைக்கும்
அயோக்கியத்தனமும் ஆகும். செய்யும் நற்காரியங்கள் பல்கி பெருகும்இந்நாளிற்கும் தங்கத்திற்கும்
எந்த சம்மந்தமும் இல்லை. உண்மையில் இந்நாள் வெள்ளி உலோகத்துக்கு உரியது எனலாம். இப்போது
மிக பலன் வாய்ந்த, நம் கஷ்டங்கள் உடனடியாக விலக,கிரக தோஷங்கள் விலக இந்நாளில் செய்ய
வேண்டிய பரிகாரத்தை பார்ப்போம் .
பூச்சி,பறவைகள்,பசு,எறும்பு மற்றும் நாய்களுக்கு உணவிடுவதே அந்த பரிகாரமாகும். மிக சக்தி வாய்ந்த இந்த பரிகாரத்தை ஒரு நிகழ்வில் காஞ்சி மஹா பெரியவரே சூட்சுமுமாக விளக்கியுள்ளார். இந்நாளில் எறும்புகள் கூடியுள்ள புற்றுகளில் சிறு சர்க்கரை அல்லது அரிசி பொடி சேர்ப்பது,நாய்களுக்கு தயிர் சாதம் அல்லது சப்பாத்தி, பசுவிற்கு அகத்தி கீரை மற்றும் பழங்கள், பறவைகளுக்கு அரிசி அல்லது தினை மற்றும் இவைகளுக்கு இந்த கோடை காலம் முழுதும் நீர் அருந்த நம் வீட்டில் ஏதேனும் வசதி செய்து கொடுத்தால் இந்த புண்ணியம் நம் வாழ் நாள் பின் தொடர்வதோடு நம் கஷ்டங்களும் கண் கூடாக விலகுவதை காணலாம். மேலும் முடிந்தவர்கள் வெள்ளி பாத்திரத்தில் வயதானவர்கள் குடிக்க நீர் மோர் வழங்கலாம். வெள்ளி பாத்திரத்தில் தயிர் சாதம் வைத்து அதை விநியோகம் செய்வதும் மிக சிறந்த பரிகாரம்.
இதையெல்லாம் விட்டு விட்டு தங்க நகை வாங்க அலை மோதுவது எந்த விதத்திலும் பயன் தராது !! அனைவரும் மேற்கண்ட முறைகளை பின்பற்றி வாழ் நாள் முழுதும் இன்புற்று இருக்க வேண்டுகிறேன் !!
Significance of Akshaya Tritiya !!!! (TAMIL)
Reviewed by Unknown
on
April 19, 2018
Rating:
Reviewed by Unknown
on
April 19, 2018
Rating:


No comments:
Post a Comment